29.6.2026 அன்று எமது கல்லூரியில் சிவகங்கை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் " பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்னும் பொருண்மையில் எமது மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி விழிப்புணர்வு கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. எமது கல்லூரி முதல்வர் தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் 70 மாணவிகள் பங்கு பெற்றனர். சமூக நல அலுவலர் சு. ரதிதேவி அவர்கள் பெண்கள் பாதுகாப்பும் விளையாட்டுகளின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.இதனைத் தொடர்ந்து தீபா, பாலா, ஆஷா, கலைச்செல்வி தற்காப்பு பயிற்சிகள் பற்றி எடுத்துரைத்தனர். சிலம்பம், யோகா, கராத்தே, வில்வித்தை பயிற்சிகள் மாணவிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் நிறைவாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.



















































































































































